அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானம் எட்ட கூட்டமைப்பு கூடுகிறது

(FASTNEWS| COLOMBO) – அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானம் ஒன்றினை எட்டுவதற்கான விசேட கலந்துரையாடல் இன்று(09) இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படும் என்றும் அதனைப் பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானம் எட்டபப்டும் என்றும் கூறப்படுகின்றது