அரசு அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு மில்லியக்கணக்கான டொலர்களை வழங்க வேண்டும்

ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டாலும் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு அரசாங்கம் 40,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த நேரிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் வர்த்தகக் கப்பல் முகாமயாளர் முன்னாள் லெப்டினன் கேணல் நிலந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுதக் கப்பல் மற்றும் வர்த்தக நடவடிக்ககைளை கடற்படையினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

எனினும், இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் எதும் ரத்து செய்யப்படவில்லை. இதனால் அரசாங்கம், அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு 40,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கத்திற்கும் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கும் இடையில் கூட்ட ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஏதேனும் ஓர் தரப்பு தனித்து தீர்மானம் எடுத்து ஒப்பந்தத்தை ரத்து செய்தால் ஏனைய தரப்பிற்கு 40,000 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும்.

நாம் ஒப்பந்த அடிப்படையிலேயே செயற்படுகின்றோம். கடற்படையினர் எமது நிறுவனத்தின் பணிகளை பொறுப்பேற்று ஒரு மாத காலமாகின்றது.  இதனால் 6,754 பேரின் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளது.

நேரடியானதும் மறைமுகமானதுமான வருமானங்கள் இழக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முகாமையாளர் நிலந்த ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார்.