அரச உயர் அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – 25 பேர் உயிரிழப்பு…

ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் அரசு உயரதிகாரிகள் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் எனா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மோசமான காலநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அனார் டாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக சென்றபோது மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற 25 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.