அரசு மின் கட்டணத்தினை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை…

அரசு மின்சார கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை என மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பிரதேசத்தில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிபொருட்களில் விலை அதிகரித்துள்ள நிலைக்கு சமாந்தரமாக இலங்கையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், மின்சார அலகின் பெருமதியை அதிகரிக்க இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.