அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரி மாணவர்கள் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்வுத் திட்டங்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்படத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மருத்துவ கல்வியின் தரத்தைப் பேணும் அரசாங்கத்தின் அனைத்து முனைப்புக்களுக்கும் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.