பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அரச அலுவலங்களின் கடமை நேரங்களை மாற்றுவது தொடர்பிலான செயற்றிட்டம் எதிர்வரும் 18ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதற்கமைய, அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும்.
பிற்பகல் 3.35 முதல் 5 மணி வரை அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும்.
நிறுவனத் தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு குறித்த இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)