அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு இன்று முதல்

(FASTNEWS|COLOMBO) – 2019 வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு அமைய அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கொடுப்பனவுகளை அதிகரித்தல் இன்று(01) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில் சுமார் 11 இலட்சம் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா இடைக்கால கொடுப்பனவு அவர்களின் சம்பளங்களுடன் மேலதிகமாக சேர்க்கப்படும். பாதுகாப்பு தரப்பினருக்கான கொடுப்பனவுகள் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் ஓய்வூதிய கொடுப்பனவில் உள்ள முரண்பாடுகளை நீக்கி விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் சுமார் நான்காயிரம் கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.