அரச ஊழியர்களுக்கு இரண்டு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்

அரச ஊழியர்களுக்கு இரண்டு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அரச பணியாளர்களுக்கு தமது சேவை காலத்தில் இரண்டு தீர்வையற்ற வாகன அனுமதிகளையே பெறமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இதனை நேற்று அறிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் தீர்வையற்ற வாகன அனுமதி மறுக்கப்பட்டமையை அடுத்து நேற்று அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே பிரதமரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அரச சேவையாளர் ஒருவர் 10 வருடங்களுக்கு ஒருமுறையே தீர்வையன்ற வாகன அனுமதி ஒன்றை பெறமுடியும்.

அத்துடன் அரச சேவையில் ஈடுபடும் காலம் முழுவதற்கும் அவர்கள் இரண்டு தீர்வையற்ற வாகன அனுமதிகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.