அரச ஊழியர்களுக்கு வரிச்சலுகை வாகன அனுமதிப் பத்திரம் – அமைச்சரவை அங்கீகாரம்

நிறைவேற்று அதிகாரிகள் தரத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பத்திரம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச பரிபாலன மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பரிந்துரை வழங்கியுள்ளனர்.

ஆறு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலமாக அரச துறையில் நிறைவேற்று அதிகாரிகள் தரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வரிச் சலுகையின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்ய உரிமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.