அரச கால்நடை மருத்துவ அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில்..

அரசாங்க கால்நடை மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்காத காரணத்தால் இம்மாதம் 9ம் மற்றும் 10ம் திகதியில் நாடளாவிய வேலைநிறுத்தமொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச காலநடை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது.