அரசாங்கத்தின் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்த சிறுமிகளை, குழு ஒன்று, விபச்சாரத்திற்கு பயன்படுத்திய சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கம்பளை பகுதியில் உள்ள விபச்சாரவிடுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட விபச்சாரவிடுதியில் சோதனைசெய்த பொலிஸார் அங்கு 20 வயதிற்கும் குறைவான யுவதிகள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர், குறிப்பிட்ட விடுதிக்கு இந்த யுவதிகள் எவ்வாறு கொண்டுவரப்பட்டனர் என அவர்கள் விசேட விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைகளின்போது நாடு முழுவதிலும் உள்ள அரசாங்கத்தின் சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு இல்லங்களிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் சிலர் அங்குள்ள சிறுமிகள் 18 வயதை அடைந்ததும் அவர்களது சட்டபூர்வ பாதுகாவலர்களாக மாறுவதும் அதன் பின்னர் அவர்கள் இந்த யுவதிகளை விபச்சார நிலையங்களிற்கு விற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த விடுதியிலிருந்து மீட்கப்பட்ட 18 யுவதியொருவர் தன்னை குறிப்பிட்ட விடுதியின் முகாமையாளர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார்.