அரச சேவையாளர்களுக்கு இம்மாதம் பிரச்சினைகள் இன்றி சம்பளம் வழங்க நடவடிக்கை…

அரச சேவையாளர்களுக்கு இம்மாதம் 30ஆம் திகதி வரை பிரச்சினைகள் இன்றி சம்பளம் வழங்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ​நேற்று (06) ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இதேபோன்று உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கும் மக்களுக்கு ஏனைய நிவாரணங்களை வழங்குவதற்கும் முடியும் என்றும் கூறினார்.

அரசியல் குழப்ப நிலை காரணமாக அரச சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது முறையற்றதாகும் என்றும் தெரிவித்தார்.