(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச சேவையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சம்பளம் மற்றும் துறைசார் தர முரண்பாடுகளை நீக்குவதற்கும் ஆணைக்குழு அமைக்கப்படும் என அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கை திட்டத்தில் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச சேவையின் பிரச்சினைகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் கடந்த ஆட்சியில் பல்வேறு எதிர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
சகல சேவைகளுக்காகவும் விதிமுறைகள் அறிமுகப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். அரச சேவையாளர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.