ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடர் எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை பொறிமுறையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
எதிர்வரும் 28ம் திகதி ஜெனிவா பயணமாகவுள்ள மங்கள சமரவீரவுடன் அரசாங்கத்தின் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவலவும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
அந்த வகையில் 29ம் திகதி இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கையில் நாட்டின் மனித உரிமை நிலைமை தொடர்பாக தான் மேற்கொண்ட மதிப்பீடு மற்றும் அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.