அரச நிறுவனங்களின் சுமார் 22 பிரதானிகள் விசாரணைக்காக அழைப்பு..

அரச நிறுவனங்களின் சுமார் 22 பிரதானிகளை பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவான கோப் குழு விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக அதன் தலைவர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் முதற்பகுதியில் குறித்த இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

கனியவள எண்ணெய் கூட்டுத்தாபனம், தேசிய லொத்தர் சபை, முதலீட்டு சபை உள்ளிட்ட 22 பொது நிறுவனங்களின் பிரதானிகளே இவ்வாறு அழைக்கப்படவுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் குறித்த விசாரணை ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.