அரச நிறுவனங்கள் குறித்தான கோப் குழு அறிக்கை நாடாளுமன்றில்..

அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மத்திய வங்கியின் முறி விற்பனை மோசடி குற்றச்சாட்டு தொடர்பான கோப் குழுவின் அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளது

இது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 5ஆம் திகதி கோப் குழுவில் அது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், கோப் குழு உறுப்பினர்கள் குறித்த அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கும்பட்சத்தில் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.