(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று(21) சமுர்த்தி அதிகார சபைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று(21) மீண்டும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு செல்லவுள்ளனர்.
தேர்தல் சட்டங்களை மீறி அந்த அதிகார சபைக்கு சொந்தமான வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக ஆணைக்குழுவிற்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர்கள் அங்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.