அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு இன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளாந்த அலுவல்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமான பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.