அரச நில அளவையாளர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு…

சேவை யாப்பினை நடைமுறைப்படுத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து அரச நில அளவையாளர்கள் இன்று(13) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

சகல அளவை பணிகளிலும் இருந்து இன்று முதல் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் இசுறு லக்மால் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தப் பணிப்புறக்கணிப்பு நேற்று(12) மற்றும் நேற்று முன்தினம்(11) சுகயீன விடுமுறையில் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)