அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் காலம் 65 வயதாக அதிகரிக்கப்படவேண்டும் என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(8) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர், இலங்கை இன்னும் நிரந்தரமான ஓய்வூதிய திட்டம் ஒன்றை கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இன்னும் இலங்கையில் ஆண்களின் வாழ்காலம் 72ஆகவும் பெண்களின் வாழ்க்காலம் 78ஆகவும் உள்ளது.
இந்நிலையில் இலங்கையின் இறுதிக் கணக்கெடுப்பின்படி தொழில்படையில் 5.5 மில்லியன் பேர் ஆண்கள், 2.5மில்லியன் பேர் பெண்கள் என்றும் ஹர்ஷ டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.
(riz)