அரச பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச ரீதியாக பாதிக்கும் பொருளதார தீர்வுகள் தொடர்பாக பொருளாதார விவகாரங்கள் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் அமைச்சரவை உப குழுவின் மூலம் மாத்திரம் முடிவுகள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உள்ள பொருளாதார விவகாரங்கள் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை உபகுழுவின் மூலம் குறித்த தீர்வுகளுக்கான முடிவுகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சர்கள் பலர் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்பாக பின்பற்றிய நடைமுறைகள் தொடர்பாக வேறு வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தியமை காரணமாக பிரதமர் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளார்.
குறித்த தீர்மானம் தொடர்பாக பிரதமரினால் புத்தாண்டுக்கு பின்னர் அனைத்து அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது