அனுருத்த பொல்கம்பொல விளக்கமறியலில்….

கைது செய்யப்பட்ட அரச – மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான அனுருத்த பொல்கம்பொல எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(16) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

——————————————————-(UPDATE) 08:15 A.M

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது…

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் நேற்று(15) கைது செய்யப்பட்டுள்ளார்.

8 மில்லியன் பணமோசடி செய்தமை தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாதமை காரணமாக நேற்று(15) கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சில நாட்களுக்குப் முன்னர் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டு பின்னர் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.