சுமார் நானூறு வருடங்கள் பழைமையான பன்னிபிட்டியவில் உள்ள அரச மரத்தினை வெட்டுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்து பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடியுள்ளனர்.
இதன் காரணமாக ஹைலெவல் பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், அங்கு கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.