அரச மருத்துவர்கள் இன்று 24 மணி நேர வேலை நிறுத்தத்தில்..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி குறித்த பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவர்கள் இன்று(22) காலை 8 மணி தொடக்கம் 24 மணி நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சைட்டம் எதிர்ப்பு பல்கலைக்கழக மாணவர் பேரணி மீது காவற்துறை மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் , மருத்துவ சபைக்கு மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவ்வாறு மருத்துவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)