அரச மருத்துவர்கள் தொடர் சேவைப் புறக்கணிப்பில்..

வட கிழக்கு மாகாணங்களிலுள்ள மருத்துவமனைகளில் சேவையாற்றும் மருத்துவர்கள் எதிர்வரும் 14ம் திகதி முதல் தொடர் சேவைப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்

குறித்த அந்த மாகாணங்களில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கான இடமாற்றங்களை வழங்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)