அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) எதிராக அந்த சங்கத்தினை சேர்ந்த ஒரு தொகுதிசார் மருத்துவர்கள் புதிய சங்கம் ஒன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர்.
இதன் மூலம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இரண்டாக பிளவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தற்போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையினால், குறித்த அந்த அரசியல் தலையீடுகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு புதிய தொழிற்சங்கம் ஒன்று உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒரு தொகுதி மருத்துவர்கள் தற்போது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளுக்கு நாள் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகி வருகின்றது எனவும் இதனால் புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமொன்றின் அவசியம் எழுந்துள்ளதாகவும் ஒரு தொகுதி மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.