அரச மருந்தாளர்கள் அடையாள சேவைப் புறக்கணிப்பில்…

அரச மருந்தாளர்கள் இன்று(01) அடையாள சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்கமைய நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் 8 மணி முதல் குறித்த இந்த அடையள சேவைப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கற்கைகள் தொடர்பான கற்கைநெறி ஒன்று இடைநிறுத்தப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த இந்த அடையாள சேவைப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 

(rizmira)