அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று(17) காலை 8 மணிக்கு ஆரம்பித்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று(18) காலையுடன் நிறைவடைகின்றது.
சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
நேற்று(17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஒஸ்ரின் பெர்ணாண்டோவிடம், மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் சிங்கப்பூர் இலங்கை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த அவர், குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.