அரச வைத்திய அதிகாரிகள் இன்று முதல் பணிப் பகிஷ்கரிப்பில்..

சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக நேற்று(21) பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று(22) காலை 8.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

இன்று நண்பகல் இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து இந்த போராட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும் என டாக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுவரை தமது வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுறும் தினமோ, நேரமோ தீர்மானிக்கப்படாதுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்கள் நிரம்பியுள்ள நிலையில் வைத்தியர்கள் இவ்வாறு போராட்டம் நடாத்துவது ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

(rizmira)