அரநாயக்க, சாமசர மலைச்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் இன்று வியாழக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அம்மலையிலிருந்து மண்சரிவு ஏற்பட்டதனால், மீட்புப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படைவீரர்கள் மற்றும் பொலிஸாரும், பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த பிரதேசத்தில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.