அரநாயக்க நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை…

அரநாயக்க சாமரகந்த நிலச்சரிவில் இடம்பெயர்ந்த 60 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ருவன்தெனிய பகுதியில் சீன நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார குறிப்பிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 1100 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன், நிலச்சரிவில் சிக்கிய 28 சடலங்கள் மீட்கப்பட்டதுடன் சுமார் 100 பேர் காணாமற் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.