அரசு 3 லட்சம் தொன்னுக்கும் 5 லட்சம் தொன்னுக்கும் இடைப்பட்ட அளவிலான அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவினக் குழுக்கூட்டத்தில் குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிந்தக்க எஸ்.லொக்குஹெட்டி தெரிவித்துள்ளார்.
சந்தையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதும் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதும் இதன் பிரதான நோக்கமாகும் என்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
சதொச மற்றும் கூட்டுறவு பிரிவின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. தற்சமயம் 1Kg சம்பா அரிசி சந்தையில் 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் 1Kg சம்பா அரிசி 80 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதோடு 1Kg நாட்டரிசி 72 ரூபாவாகும்.
தனியார் துறையும் அரிசியை இறக்குமதி செய்கிறது. அரசாங்கம் முன்மொழிந்துள்ள விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என தனியார் துறையினர் கூறினாலும், அரிசியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறியிருந்தார்.