அரிசி கழுவிய நீர் எப்படி உங்களை அழகாக்கும்னு தெரிஞ்சுக்கனுமா?

அரிசி தண்ணீரில் ஏராளமான ஊட்டச்சத்து அளவுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், போன்றவை அடங்கியுள்ளன. முகம் அழகாக தூய்மையாக இருக்க பெண்கள் இந்த அரிசி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

எப்படி இந்த அரசி தண்ணீரை உங்கள் பியூட்டி பராமரிப்புக்கு பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம். இந்த முறைகளை பின்பற்றி உங்கள் கனவு சருமத்தை பெற இயலும். எனவே ட்ரை பண்ணி பாருங்க.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் க்ரீன் டீ:
2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ இவற்றை கலந்து முகத்தை கழுவ வேண்டும். பிறகு வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் பொலிவான சருமத்தை பெறலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் ரோஸ் வாட்டர்:
முகத்தில் உள்ள வெயிலினால் ஏற்பட்ட கருமை போன்றவற்றை போக்க 2-3 டீ ஸ்பூன் அரிசி தண்ணீர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த ஹோம்மேடு டோனர் கலவையை உங்கள் முகத்தில் அப்ளே செய்யும் போது உங்கள் முகத்தில் உள்ள மாசுக்கள், தூசிகள் போன்றவற்றை நீக்குகிறது. இந்த ஸ்பெஷல் டோனரை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் தூய்மையான மாசுக்கள் இல்லாத முகத்தை பெறலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் தேன்:
1 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு என்ற முறையில் இதை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் எல்லாம் மறைந்து மாசு மருவற்ற முகத்தை பெறலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் கற்றாழை ஜெல்:
2 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீ ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும். இப்படி அரிசி தண்ணீரை பயன்படுத்தும் போது மிருதுவான மென்மையான சருமத்தை பெறலாம். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் மில்க் பவுடர்:
ஒரு பெளலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கலக்கவும். நன்றாக கலந்து பேஸ்ட் மாதிரி ஆக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த மற்றும் சூடான நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் சரும டேனை போக்குகிறது.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய்:
ஒரு பெளலில் வெள்ளரிக்காயை நறுக்கி எடுத்து கொள்ளவும். பிறகு அதை நன்றாக மசித்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீரை சேர்க்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். இந்த முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் உங்கள் சருமம் பொலிவாகி புதுப் பொலிவுடன் காணப்படும்.