அரிசி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை இதுவரை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கு உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கமைய நாட்டரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 80 ரூபாவாகவும் புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
எது எவ்வாறு இருப்பினும், கட்டுப்பாட்டு விலையை மீறுவோர் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அது வர்த்தமானியில் வௌியிடப்பட வேண்டும்.
இந்நிலையில், வர்தமானியில் வௌியிடாத வரை, இது தொடர்பிலான சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அதிகாரம் இல்லை என, அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.