அரைகுறை ஆடை அணியும் திட்டம் இப்போதைக்கு இல்லை…

இணைய தள இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் ஹீரோயின்கள் பலர் டாப்லெஸ் படம், டூபீஸ் நீச்சல் உடை படம் என படுகவர்ச்சியாக படங்களை வெளியிடுகின்றனர்.

ஒரு சில நடிகைகள் திரைப்படங்களிலேயே டாப்லெஸ், நிர்வாண காட்சிகளில் நடிக்கின்றனர். பல நடிகைகள் கவர்ச்சி ஹீரோயின் பட்டியலில் வெகுசீக்கிரமே இடம்பிடித்தாலும் ஒரு சில நடிகைகள் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று பிடிவாத போக்குடன் இருக்கின்றனர். அவர்களில் தற்போதைக்கு உதாரணமாக இருப்பவர் சாய்பல்லவி.

நிறைய படங்கள் தேடி வந்தாலும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளாமல் கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார். மணிரத்னம் இயக்கிய படமொன்றில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட சாய் பல்லவி, பிறகு கதைக்கு ஏற்ப சில நெருக்கமான காட்சிகளில் ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் நடிக்க மறுத்துவிட்டார்.

தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவரும் நீச்சல் உடையோ, கவர்ச்சி உடையோ அணிய மாட்டேன் என்று தன்னை அணுகும் இயக்குனர்களிடம் கூறிவிடுகிறார்கள்.

இதுபற்றி அவர் கூறியது: கவர்ச்சி உடை, நீச்சல் உடை போன்றவற்றை அணிந்து நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. கண்ணியமான, பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிமையான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இதுவரை அப்படித்தான் நடித்து வருகிறேன். இனியும் அப்படித்தான் நடிப்பேன். அரைகுறை ஆடை அணியும் திட்டம் எதுவும் இப்போதைக்கு எனக்கு இல்லை என அனுபமா கூறியுள்ளார்.