(FASTNEWS|COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அளவுக்கு இலங்கை அணியிடம் தரம் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக அஞ்செலோ மெதிவ்ஸ் அபார சதம் ஒன்றை பெற்றார். அதற்கு அவர் தகுதியானவர். இலங்கைக்கு சவாலான ஓட்டம் ஒன்றை பெறமுடியாதது போல் தெரிந்தது. ஆனால், பெரிய இணைப்பாட்டம் ஒன்றை பெற்றதற்கு அவருக்கும் திரிமான்னவுக்குமே பாராட்டுகள் சேர வேண்டும் என மஹேல ஜெயவர்தன கூறியுள்ளார்.
“மத்திய வரிசை பலவீனப்படுவது போல் தெரிந்தாலும் மெதிவ்ஸ் அதனை சரிசெய்தார். அவர் அதிக அச்சுறுத்தல் கொண்ட ஆட்டத்திற்குச் செல்லாமல் இலங்கை அணியின் ஓட்டங்களை 264 ஆக உயர்த்தினார். ”
“அஞ்செலோ தொடரின் ஆரம்பத்தில் ஆடத்திறனுடன் இருக்கவில்லை. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான இன்னிங்ஸ் அவருக்கு தீர்க்கமானதாக இருந்ததோடு அது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ”
அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ போன்ற இளம் வீரர்கள் மூலம் வலுவான துடுப்பட்ட வரிசை ஒன்றை கட்டியெழுப்ப முடியும். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2023 இல் இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டி வரை விளையாட தகுதி பெற்றவர்களாக உள்ளனர் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.