(FASTNEWS|COLOMBO) – மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப்பிணை மற்றும் தலா 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் மூவரடங்கிய விசேட நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.