மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன்(08) முடிவடைகிறது.
கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவினால், அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இது தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல், இன்னும் அவரிடம் கையளிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூரில் இருக்கின்றார் எனக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, சர்வதேச பொதிச் சேவை ஊடாகவும், அதிவேக அஞ்சல் ஊடாகவும் அவருக்கான அறிவித்தலை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், சிங்கப்பூரில் அவர் வசிக்கும் இல்லம் பூட்டப்பட்டுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
#####