(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் பிரதான பிரதிவாதியான அர்ஜுன் மகேந்திரனை இலங்கை அரசுக்கு கையளிப்பது தொடர்பில் தனது நிலைப்பாடு தொடர்பில் சிங்கப்பூர் தெளிவாக விளக்கமளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க தேசிய செயற்பாட்டு திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று(18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.