துறைமுக அபிவிருத்தி அமைச்சரும் சகோதரருமான அர்ஜூன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வார் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பிரசன்ன மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அர்ஜூன ரணதுங்க அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என்பதே எனது நம்பிக்கையாகும். எவ்வாறிருப்பினும், அர்ஜூன எனக்கு சவாலாக இருக்க மாட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களோ எனக்கு போட்டியாக இருக்க மாட்டார்கள் என பிரசன்ன ரணதுங்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.
(riz)