மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் நாளை(22) சட்டமா அதிபர் தரப்பினரால் குறுக்கு விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின் கோரிக்கைக்கு அமைவாக ஆணைக்குழு குறித்த இந்த குறுக்கு விசாரணைகளை நடத்த சம்மதித்ததுடன் அது வரை ஆணைக்குழு நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துள்ளது.
பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று(20) இரண்டாவது நாளாகவும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளித்தார்.
குறித்த இச்சாட்சியத்தின் போது, பிணைமுறி ஏலம் தொடர்பில் அர்ஜுன அலோசியஸுக்கு தான் எந்த வகையிலும் உதவி செய்யவில்லை எனவும், மத்திய வங்கியின் எந்த ஒரு அதிகாரியையும் தான் அவ்வாறு உதவி செய்ய வற்புறுத்தவில்லை எனவும் அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளித்திருந்தார்.
(rizmira)