சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி மோசடி நடவடிக்கைகளில் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இந்நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து சர்வதேச பொலிசுக்கு அறிவிக்குமாறு ஊழலுக்கு எதிரான குரல் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.
அர்ஜுன மகேந்திரன் தற்போது இருக்கும் இடம் குறித்து பிரதமருக்கு நன்கு தெரியும் எனவும், அவரை இந்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதியின் கடமை எனவும் குறித்த அமைப்பின் ஒன்றிணைப்பாளர் வசந்த சமரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் கோப் அறிக்கை வெளியிட தினம் குறித்திருந்த நிலையில் அதற்கு முன்னதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் வெளிநாட்டுக்கு தப்பிச்ச் சென்றதாகவும் சமரசிங்க குற்றஞ்சாட்டி இருந்தார்.
#reeshma