முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் வியாபார ஒப்பந்தங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் எந்த ஒரு குழுவிலும் உள்வாங்கப்படவில்லை என சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிங்கப்பூர், சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் செய்து கொள்ளவுள்ளதாகவும், இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை நியமிக்கவில்லை என்றும் குறித்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை குறித்த வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான குழுவில் கலாநிதி சமன்கெலேகம, மங்கள யாப்பா, கலாநிதி ஹரித விக்ரமநாயக்க, கே.ஜே.விஜயசிங்க, வர்த்தக சபை மற்றும் வர்த்தக சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.