(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அறுவக்காடு கழிவு கொட்டும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கை புத்தளம் நீதவான் நீதிமன்றத்திற்கும், வனாத்தவில்லு பொலிஸ் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அறிக்கை தொடர்பில் நீதிமன்றம் கவனம் செலுத்தியதன் பின்னர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வனாத்தவில்லு பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.