(FASTNEWS|COLOMBO) அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.