சட்ட விரோதமான முறையில் திட்டங்களில் ஈடுபடுகின்ற ‘அலி ரொஷான்’ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளை ஒக்டோபர் 26 ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி யானையொன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான அலி ரொஷான் கடந்த செப்டெம்பர் 06ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.