(FASTNEWS-COLOMBO) சட்ட விரோதமாக யானைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அலி ரொஷான் என்றழைக்கப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேரையும் விடுவிக்க கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று(07) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.