மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமாகவிருந்த மெண்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் பணிகள் ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரின் உதவியினால் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உற்பத்தி வரி செலுத்தப்படாமையினால் குறித்த இந்த உற்பத்திசாலை கடந்த 04 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், சுமார் 50 கோடி ரூபா உற்பத்தி வரியை இந்த அமைச்சர் செலுத்தி, தடைப்பட்டிருந்த உற்பத்திப் பணிகளை மீள ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.