அலோசியஸ் கைது செய்யப்பட்டது அரசியல் நாடகமே – அமைச்சர் அகில..

ஒரு வருடத்திற்கும் கூடிய காலங்கள் நிறைவடைந்ததற்கு பின்னர், பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் கைது செய்யப்பட்டமை அரசியல் நாடகம் என ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொது செயலாளரும், கல்வி அமைச்சருமாகிய அகில விராஜ் காரியவசம் நேற்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி சம்பவம் தொடர்பில் பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் தடை செய்து ஒரு வருட காலம் கடந்திருந்தும் குறித்த நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் கைது செய்யப்பட எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறு இருக்க எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை மையமாகக் கொண்டே இவர் கைது செய்யப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகம் நிலவுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

#rishma…