அலோசியஸ் மற்றும் பலிசன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பெர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(09), உத்தரவிட்டார்.